புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ஜனாதிபதியே பதில் கூறவேண்டும்; சரவணபவன் எம்.பி 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இராணுவ வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் இணைந்து நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டம் கிளி . மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் இதற்கு ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவே பொறுப்புக் கூறவேண்டும்.

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் இன்னும் முடிந்து விடவில்லை. இன்னும் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள்  விடுவிக்கப்படாது இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. எனினும் நாம் மக்களை மீள்குடியேற்றி விட்டோம் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என அரசு சர்வதேசத்திடம் கூறிவருகின்றது.

இதனால் வடக்கு கிழக்கில் தற்போது எதுவுமே நடைபெறவில்லை என்ற மாயையினை அரசு ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை நிறுத்தப்படவேண்டும் என்றார்.

மேலதிக உரை காணொலி வடிவில் ..


ad

ad