புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்
விளம்பரமாகவும் பிரசுரமாகியிருந்தது. இதனை இந்த வாரத்தில் கூடிய அமைச்சரை பரிசீலித்துள்ளது.
இதன்போது இலங்கை 1931 ஆம் ஆண்டின் சர்வதேச சட்டத்தின்கீழ் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் அதற்கு வெளிநாடுகள் தேர்தல்களை பற்றி போதிக்க தேவையில்லை என்ற கருத்து வெளியிடப்பட்டது.
அத்துடன் இது இலங்கையின் உள்ளக விடயத்தில் அமெரிக்காவின் தேவையற்ற தலையீடு என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தியோகபூர்வமாக அமெரிக்க தூதுவரை அழைத்து இலங்கையின் இராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அமைச்சரவை இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா யோசனை முன்வைத்தமை முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா
இலங்கையின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காகவும அமெரிக்கா இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிதியின் இலங்கை மதிப்பு சுமார் ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவாகும்.
இந்த நிதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இலங்கையின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா இவ்வாறு பணத்தை வழங்க உள்ளமை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில் இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலில் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிப்பதாக அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad