புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

அவுஸ்திரேலிய அணியை சுருட்டிய யாழ்.மைந்தர்கள் 
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் 
யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுவுள்ளது.
 
யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து  வருகை தந்துள்ள இளைஞர்
கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு   இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
 
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது .பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி20  ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து  படுதோல்வியை தழுவியது.
 
 
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் போட்டி பிரபல்யம் வாய்ந்த ஒன்றாக விளங்குவதுடன் இலங்கைக்கு என சாதனையை
படைத்து புகழ்பெற்ற வீரராக திகழும் முத்தையா முரளிதரன் போல் யாழ்.மாட்டத்திலும் பல முரளிதரன்களை 
உருவாக்கும் நோக்கிலே இந்த கிரிக்கெட் போட்டி இடம்பெறுகின்றது.
 
இந்த போட்டியினை இராணுவத் தலைமையகம் மற்றும் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகம்
ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தது.
 
மேலும் இந்நிகழ்வுக்கு யாழ்.மாவட்ட படைகளின் இரண்டாம் நிலைக் கட்டளை அதிகாரி பிரசாத் சமரசிங்க,
யாழ்.மாவட்ட படைத் தளபதி  உதயபெரேரா,யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,யாழ்.மாநகர
முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,புனித பத்திரிசிரியார் கல்லூரி அதிபர் ஜெறோம் செல்வநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.          
 
 
 
 
 
 
 
 
 

ad

ad