பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர்

குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மலியதேவ பாடசாலையின் பிரதி அதிபரையே தமது அலுவலகத்துக்கு அழைத்து மேஜர் முழந்தாளிட செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற நாள் தெரியவரவில்லை. எனினும் பாடசாலையில் தமது மகனை முழந்தாளிட செய்தமைக்கு தண்டனை வழங்கும் வகையிலேயே மேஜர் பிரதி அதிபரை தண்டித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வறான சம்பவம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்று ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது