புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புக்கிட் அம்மான் பொலிஸ் நிலைய பயங்கரவாத விசேட பிரிவின் அதிகாரிகள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் குண்டு தயாரிப்பு நிபுணர் எனவும் இவர் அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருந்தார் எனவும் மலேசியா இன்ஸ்பெக்டர் ஜென்ரல் டான்ஸ்ரீ காலித் அபுபக்கர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மற்றுமொரு சந்தேக நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்யும் முயற்சிக்கு உதவியவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது சந்தேக நபர் இந்தியாவில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்.
நான்காவது சந்தேக நபர் விடுதலைப் புலிகளின் வலையமைப்பின் தகவல்களை சேகரிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர் எனவும் காலித் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து போலி கடவுச்சீட்டுகள், மலேசியா உட்பட வெளிநாடுகளின் குடிவரவு துறையின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மலேசியாவில் இந்த வருடம் கைது செய்யப்பட்ட 14 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேர் அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர் எனவும் காலித் அபுபக்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad