புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

ஈராக்  கிஞ்சார் மலையில் தஞ்சம் போன யாசித்தி மக்கள் 500 க்கு மேல் சாவு 
சிஞ்சார் மலைக்குன்றுகளில் யாஸிதி இன மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
சிரியா, ஈராக்க்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பெருமளவு நகரங்களைக் கைப்பற்றி 'இஸ்லாமிய தேசம்' எனப் பெயரிட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் பெயரும் கூட' இஸ்லாமிய தேசம்' என மாற்றப்பட்டுவிட்டது.
இஸ்லாமிய தேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ்ன் நாடுபிடி வேட்டை நின்றபாடில்லை. யாஸிதிகள் என்ற இனத்தவர் வாழும் சிஞ்சார் நகரைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். தேசம்.
இதன் பின்னர்தான் யாஸிதிகள் பெருந்துயரை எதிர்கொள்ள நேரிட்டனர். இஸ்லாமிய தேசத்தின் கீழ் தங்களது நகரங்கள் வந்த உடன் அகதிகளாக சிஞ்சார் மலைக்குன்றுகளை நோக்கி அகதிகளாகி ஓடினர்.
ஆனால் சிஞ்சார் மலைக்குன்று பாலைவனம், வெப்ப புயல் வீசும் கொடும் வெயில், உண்ண உணவு கிடைக்காமல் வெயிலை தாங்க முடியாமல் பசிக் கொடுமையால் மலை முகடுகளில் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர் யாஸிதிகள்.
அப்படியே செத்து மடிந்த உடல்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றனர் யாஸிதிகள், இந்த உடல்களை நாய்கள்தான் குதறிக் கொண்டிருக்கின்றன, இவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பிஞ்சு குழந்தைகள். சிஞ்சார் மலைக் குகைகள் இப்போது மனித உடல்களால் நிறைந்து போய் கிடக்கிறது.
சுமார் 50 ஆயிரம் யாஸிதிகள் பட்டினியால் வாடுகின்றனர், சிஞ்சார் மலைக் குன்றுகளைத் தாண்டி சிரியாவுக்குள் சில நூறு யாஸிதிகள் அடைக்கலாமாகிக் கொண்டிருக்கின்றனர்.
சில வெளிநாடுகள் கரிசனப் பார்வையுடன் உணவும், குடிநீரையும் ஹெலிகாப்டர்கள் மூலம் யாஸிதிகளுக்கு வழங்கி வருகின்றன.
ஈராக் ராணுவம் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டாலும் வெளிநாட்டு உதவிகளும் கூட யாஸிதிகளின் தாகத்தை தீர்க்கவில்லை.

ad

ad