புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

அல் கொய்தாவுக்கு  விடை கொடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு தாவும் தீவிரவாதிகள்

அல் கொய்தாவில் இருந்து வந்த தீவிரவாதிகள் பலரும், தற்போது ஈராக்கை உலுக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பொலிவிழந்து போன அல் கொய்தாவில் இதுவரை இருந்தவர்களுக்குப் புதிய களம் போல, ஐஎஸ்ஐஎஸ் காணப்படுவதாகவும், எனவே பலரும் அந்த தீவிரவாத அமைப்பில் இணைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து பல வெற்றிகளை ஈராக்கில் பெற்று வரும் நிலையில், அல் கொய்தாவினர் அதில் இணைந்து மேலும் பல கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது அரபு நாடுகளைச் சேர்ந்த சில அல் கொய்தா அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்.
ஏமன் நாட்டைச் சேர்ந்த சிலர் இதில் இணைந்துள்ளனர். அதேபோல லிபியாவைச் சேர்ந்த ஒரு பிரிவும் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ கிலாபத் அமைப்பு அல் கொய்தாவிலிருந்து பிரிந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதாக அறிவித்தது. உண்மையில் அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்து உருவானதே இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பாகும்.

ad

ad