புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014



த்தி மேல் நடப்பது விஜய்க்குப் பழக்கமாகிவிட்டது. அந்த நடையின் இலக்கு, 2016 சட்டமன்றத் தேர்தல். விஜய்யின் புதிய படம் "கத்தி'. அதில் டபுள் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தில்
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கிளம்பிய பரபரப்புக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழுணர்வு அமைப்பினரை சந்தித்தார் இயக்குநர் முருகதாஸ். விஜய் படம் தொடர்பான இந்த சர்ச்சையுடன், அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சர்ச்சையும் சேர்ந்துகொள்ள... இதையெல்லாம் சமாளிக்க விஜய் என்ன திட்ட மிட்டிருக்கிறார் என அவரது உள்வட்டாரங்களில் கேட்டால், "எல்லா வற்றையும் அவர் ரசித்துக் கொண்டிருக்கிறார்' என்ற பதில் வர... நாம் ஷாக்கானோம். அரசியல் மீதான அவரது ஆர்வம்தான் அவரை இப்படி கத்தி மேல் நடக்கவைக்கிறது என்பது அவர்களிடம் பேசும் போது தெரிந்தது.

""எங்க இளைய தளபதி விஜய்க்கு இப்படிப்பட்ட சர்ச்சைகள் பழக்கமாயிடிச்சி. அரசியல் ஆர்வம்ங்கிறது அப்பா எஸ்.ஏ.சி.க்குத்தான் ஆரம்பத்தில் இருந்தது. அறிஞர் அண்ணா மாதிரி தன்னையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாதிரி விஜய்யையும் கணக்குப் போட்டு காய் நகர்த்தினாரு. தி.மு.க ஆதரவாளரான எஸ்.ஏ.சி., விஜய்யோட "காவலன்' பட பிரச்சினையால தி.மு.க.வுக்கு எதிரா, அ.தி.மு.க. பக்கம் வந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் சப்போர்ட் பண்ணினாரு. ஆனா "தலைவா' படப் பிரச்சினை யால அ.தி.மு.க. தலைமை மேலே எஸ்.ஏ.சி. மட்டுமில்ல, இளைய தளபதி விஜய்யும் கடுப்பாத்தான் இருக்காரு. அதனால நேரடி அரசியல் மீதான ஆர்வம் அவருக்கு அதிகமாகிக்கொண்டே வருது'' என்றவர்கள், ""ஆரம்பத்தில் அன்னா ஹசாரே, ராகுல்காந்தி இவங்களை சந்திச்ச விஜய், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த நரேந்திரமோடியை கோவையிலே சந்திச்சாரு. இது எல்லாமே அரசியல் நுழைவுக்கான கணக்குதான். எந்த ஏரியா சரியா இருக்கும்னு அலசிப் பார்த்துக்கிட்டே இருந்தவரு இப்ப என் வழி தனி வழிங்கிற முடிவுக்கு வந்துட்டாரு'' என்றனர்.




"இது, ரஜினியோட "படையப்பா' டயலாக் மாதிரியே இருக்குதே' என்று நாம் கேட்டதும்... ""அந்த டயலாக்கே "நாளை நமதே' படத்தில் எம்.ஜி.ஆர் பேசிய டயலாக்தான். எம்.ஜி.ஆர்., ரஜினிக்கு அடுத்தமாதிரி தமிழ்நாட்டில் மாஸ் ஹீரோ எங்க இளைய தளபதி விஜய்தான். அதனாலதான் ரஜினி வழியில் அடுத்த சூப்பர் ஸ்டாரா முன்னிறுத்தி, எம்.ஜி.ஆர் வழியில் அரசியலில் சக்ஸஸ் ஆகணும்னு நினைக்கிறாரு. கத்தி மேலே நடக்குற மாதிரிதான் இருக்கும். மதுரை விழாவை சக்ஸஸ்ஃபுல்லா நடத்திட்டா எல்லாம் சரியாயிடும்'' என்றனர் நம்பிக்கையான குரலில்.

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார் விஜய் ரசிகர்மன்றத் தலைவரான புதுச்சேரி ஆனந்த். சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும் விழாவை எங்கே நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டபோது, ஏற்கனவே சென்னையில் விஜய் பிறந்தநாள் விழாவை நடத்த முயன்றபோது ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு பிரம்மாண்ட விழா ரத்தானதை மனதில் வைத்து சென்னை வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. திருச்சியில் நடத்தலாம் எனத் திட்டமிட்டபோது, அங்கே தி.மு.க நடத்திய திருப்புமுனை மாநாட்டிற்குப் பிறகு மோசமான தேர்தல் தோல்வி ஏற்பட்டதை சிலர் நினைவுபடுத்த, சென்ட்டிமென்ட்டாகத் திருச்சியும் தவிர்க்கப்பட்டது. தனது ஊரான புதுச்சேரியிலேயே நடத்தலாம் என ஆனந்த் சொன்னபோது, அது வேறு மாநிலம் என்றாகிவிடும் என்பதால், விஜய்யின் சாய்ஸ் மதுரையாக இருந்துள்ளது.

மதுரையில்தான் விஜயகாந்த் கட்சி தொடங்கினார். அவர் தாக்குப்பிடித்து நிற்கிறார். அதனால் தமிழ் அடையாளமாக விளங்கும் மதுரையில் விழா நடத்தலாம் என முடிவாகியது. இந்த விழாவுக்குத் திரைத்துறை பிரபலங்கள் பலரையும் அழைத்து, தன்னுடைய செல்வாக்கைக் காட்டி அப்படியே அரசியலில் அடியெடுத்து வைப்பது என்பதுதான் விஜய்யின் ப்ளான். இதற்கான முயற்சியில் பி.ஆர்.ஓ. செல்வகுமார் இறங்கினார். ஆனால், ரஜினி தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக முன்னிறுத்தும் விழாவில் பங்கேற்க முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் பலரும் தயங்கி, வெவ்வேறு காரணங்களைச் சொல்லித் தவிர்த்திருக்கிறார்கள். இது விஜய்யை அப்செட்டாக்கினாலும் அரசியலை நோக்கிய அவரது மூவ் தொடர்ந்தபடியே இருக்கிறது.

விஜய் ரசிகர்மன்றத் தலைவர் ஆனந்த், புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இப்போது முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரசில் இருக்கிறார். கடந்த  ஜூலை 18-ந் தேதியன்று ஆனந்த்துக்குப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது புதுச்சேரியில் பரவலாக வைக்கப்பட்ட பேனர்களில் ரங்கசாமியும் விஜய்யும் புன்னகைத்தனர். ஆனந்த்தை வாழ்த்துவதற்கு நேரில் வந்த முதல்வர் ரங்கசாமியிடம் கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மன்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஆனந்த். ரங்கசாமியை விரைவில் விஜய் சந்தித்து, மதுரை விழாவுக்கு அழைப்பார் என்றும் ரசிகர்மன்றத் தரப்பில் சொல்லப்படுகிறது.

என்.ஆர். காங்கிரஸ் தலைவ ரான ரங்கசாமி தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். எம்.பி. தேர்தல் சமயத்தில் கோவையில் நரேந் திர மோடியை விஜய் சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் தனித்தடம் பதிக்கணும் -நீங்கள் இணைஞ்சா மாஸ் காட்டலாம்' என்று மோடி சொன்னதாக விஜய் தரப்பு சொல்கிறது. "இந்த சந்திப்பு நடந்த நாளிலிருந்து மோடி மீதும் பா.ஜ.க மீதும் விஜய்யின் ஆர்வம் கூடி யிருக்கிறது' என்கிறார்கள் அவர் களுக்கு நெருக்கமான வட்டத்தினர். "சந்திப்பில், நாங்களும் (பா.ஜ.க.வும்) கேப்டன்ஜியும் இணைந்தே இருப்போம்' என்று மோடி சொன்னதால், விஜய காந்த்துடனான நெருக்கத்தையும் விஜய் விரும்புகிறாராம்.

""சினிமாவில் கேப்டனோடு நான் சேர்ந்து நடிச்ச செந்தூரபாண்டி தான் என்னை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சென்டர் மக்கள்கிட்டேயும் கொண்டு போய் சேர்த்தது. அதுதான் இப்ப என்னை சூப்பர் ஸ்டார் அந் தஸ்துக்கு உயர்த்தியிருக்குது. அரசிய லிலும் நிச்சயமா இந்த சென்ட்டி மென்ட் ஒர்க் அவுட் ஆகும். தேர்தல் வரை தே.மு.தி.க.வின் மறைமுக ஆதரவில் செயல்படுவோம். அதற்கப் புறம் நிலைமையைப் பொறுத்து, நேரடியா கூட்டணி அமைக்கிறதா அல்லது வேறு வகையில் ஆதரவு பெறுவதான்னு பார்த்துக்கலாம்'' என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் வியூகத்தை விளக்கியிருக்கிறார் விஜய். "மாநிலத்தில் செல்வாக்கை வளர்க்கும் அதேவேளையில், தேசிய அளவிலான அரசியல் பார்வையுடனேயே விஜய் காய் நகர்த்துகிறார்' என்ற மன்ற நிர்வாகி களிடம், "இவையெல்லாம் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்குத் தெரியுமா?' என்றோம்.

""அப்பா எடுத்த அரசியல் மூவ்கள்தான் தனக்கு சிக்கலை உண்டாக்கிவிட்டது என விஜய் நினைத்த தால், அவரது அப்பா ஆதரவு ரசிகர் மன்ற நிர்வாகிகளையெல்லாம் பல மாவட்டங்களி லும் மாற்றிவிட்டு இளைஞரணி என்ற பெயரில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டனர். இதில் ஆனந்த்தின் ரோல் முக்கிய மானது'' என்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள், ""விஜய்யின் தேசியப் பார்வையிலான அரசியல் மூவ் பற்றி எஸ்.ஏ.சி.க்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. அவரோ, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசியல் நலன்களை முன்னிறுத்துவதுதான் சரியாக இருக்கும்' என்ற தன் ஆலோசனையை சொல்லியிருக் கிறார். ஆனாலும் தமிழ்மொழி, தமிழ்நாடு, ஈழம் போன்றவற்றில் விஜய் காட்டிய பழைய ஆர்வம் இப்போது இல்லை. தமிழகத்தில் அரசியல் செல்வாக்குள்ள சினிமா பிரபலங்கள் மீதுதான் அவரது ஆர்வம் திரும்பியுள்ளது. அந்த பிரபலங்கள் தமிழுணர்வாளர்களாக இருந் தாலும் இணைந்து செயல்படவே விஜய் விரும்புகிறார்'' என்றவர்கள், ""நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் அதிகளவில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்'' என்றும் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியின் பின்னணியில் விஜய் காட்டும் ஆர்வமும் இருக்கிறது என்ற தகவல் கசிகிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் தரும் விழாவுக்கு சீமான் வரவேண்டும் என விஜய் நேரில் வலியுறுத்தியபோது, ""நாம் தமிழர் இயக்கமும், உங்களோட விஜய் மக்கள் இயக்கமும் இணைந்து அரசியலை சந்திக்கணும். அத னால நீங்க நேரடி அரசியலுக்கு வாங்க'' என அழைப்பு விடுத் திருக்கிறார் சீமான்.

இதுபற்றி சீமானிடமே நாம் கேட்டோம். ""தமி ழகத்தை தமிழன் ஆள வேண்டும். அதற்கு மக்க ளிடம் அறிமுகமாகியிருக்கும் தம்பி விஜய் போன்ற இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும். அதனால்தான் அவர் எங்களோடு இணைந்து செயல்பட அழைத்தேன். அவரும் இது பற்றி ஆலோ சிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இன மானத்தை விட வருமானத்தைத்தானே சினிமா புள்ளிகள் பலரும் முக்கியமாகக் கருதுகிறார்கள். தம்பி விஜய் இதிலிருந்து மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், அவர் என்ன முடிவெடுப்பார் என எனக்குத் தெரியாது'' என்று தெளிவாகவே சொன்னார் சீமான்.

"தன்னுடைய சினிமா தொடர்பான சிக்கல்களால் தி.மு.க.வைவிட அ.தி.மு.க. மீதுதான் விஜய்யின் கோபம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் எம்.பி. தேர்தலின்போது மதுரையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேனர் வைத்த மன்ற நிர்வாகியை போனில் பிடித்து டோஸ் விட்டிருக்கிறார். எனினும், ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை நேரடியாக எதிர்ப்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்பதால் மோடி இமேஜ், விஜயகாந்த் துணை, சீமான் ஆதரவு என அரசியல் வளர்ச்சிக்குத் தேவையான பிடிமானங் களைக் கெட்டியாகப் பற்றியுள்ளார்' என்கிறார்கள் விஜய்யின் அரசியல் காய் நகர்த்தல்களை அறிந்தவர்கள்.

இந்த பக்கபலத்துடன் பக்கா பலமாக 2016-க்குள் தனது அரசியல் செல்வாக்கை மாற்றிவிடவேண்டும் எனத் திட்டமிடும் விஜய், ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது நீலாங்கரை வீட்டிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்களை வரவைத்து ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். இதில் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்து வருகிறதாம். கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ரசிகர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக்கொள்கிறார். இதற்கு காரணம் அவரது அரசியல் ஆர்வம்தான் என்று சொல்லப்படவே, அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் ரவிராஜிடம் பேசினோம்.

""நான் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒவ் வொரு வருடமும் இப்படி மாவட்டவாரியா ரசிகர்களை யும் மன்ற நிர்வாகிகளையும் அழைத்து படம் எடுப்பதும் அவர்களுக்கு சாப்பாடு போடுவதும் வழக்கம். இளைய தளபதியிடம் எதிர்காலத் திட்டம் பல இருக்கலாம். ஆனால், இப்போது எங்களின் ஒரே நோக்கம், "கத்தி' படத்தின் வெற்றிதான்'' என்றார் ரவிராஜ். மன்றத் தலைவர் ஆனந்த்தின் முனைப்பால் நியமிக்கப்பட்ட மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகள் எல்லோரிடமும், "உங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் சந்திலும் விஜய் படம் இருக்கிறபடி செய்யவேண்டும். மக்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் விஜய் படம் அவர்களின் கண்களில் படுகிறபடி இருக்கவேண்டும். இது மனரீதியாக அவர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நேரடி அரசியலுக்கு வரும்போது விஜய்யை தங்கள் தலைவராக பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படியே அந்த நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.

""தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுக்க ஆள்பலம் இருப்பது நம்முடைய மன்றங்களுக்குத்தான். அதனால் உறுப்பினர் களை அதிகப்படுத்தி, ஒன்றியம் -பேரூர் என எல்லா இடங்களிலும் கிளைகளை உருவாக்குங் கள். அதன் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள். இதையெல்லாம் சரியாக செய் தால் 2016-ல் நம்ம கொடிதான் கோட்டையில் பறக்கும்'' என்றும் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய்யின் அறிவுறுத்தல்படி தெரிவித்திருக் கிறார் ஆனந்த். 2016-ல் ஆட்சி, முதல்வர் பதவி எனத் திட்டமிட்டுள்ளார் விஜய். அதைத் தனிக்கட்சி தொடங்கி சாதிக்கப் போகிறாரா? ஏற்கனவே செயல்படும் இயக்கங்களில் பங்கெடுத்து செயல்படுத்தப்போகிறாரா? என்பது இன்னும் அவரது மன்றத்தினருக்கே சரியாகப் புலப்படவில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான விழா என்பது மட்டும் பல அதிரடி திட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை மட்டும் உணர்ந்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யிடம் அவரது நேரடி அரசியல் ஆர்வம் மற்றும் 2016-ல் ஆட்சி என்கிற இலக்கு பற்றியும் அவருக்கு வேண்டியவர்கள் கேட்டிருக்கிறார்கள். வழக்கம்போல தனது டிரேட் மார்க் மவுனப் புன்னகையையே பதிலாகத் தந்துள்ளார் விஜய். அதில் மர்மமான அர்த்தங்கள் அடங்கியிருப்பது தெரிந்த தாம்.

-இளையசெல்வன், தமிழ் இளா


ad

ad