டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக மனோஜ் திவாரி 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா, மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பாக அணித்தலைவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரருமான கௌதம் கம்பீர் 8 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். இவருக்கு துணையாக யூசுப்பதான் 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத் தாவின் உமேஷ் யாதவ் தெரிவானார்.