அண்மையில் சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உ
தய குமார் தலைமையில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வின் போது வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ் நிகழ்வின் போது தவிசாளர் நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது
நீண்ட கொடிய போர் எமது சகல வளங்களையும் வாய்ப்புக்களையும் இழக்க செய்த போதிலும் எம்மிடம் உள்ள கல்வி நிலையை எந்த எதிரியாலும் அழிக்க முடியாத நிலை காணப்பட்டது.
எம்மிடம் உள்ள கல்வி நிலையின் தன்மையே இன்றைய எமது இருப்பிற்கான காரணம் என குறிப்பிட முடியும்.
இதற்கும் மேலாக எமது கல்வி அறிவின் தன்மையை மேம்படுத்த மிக முக்கியமானது ஒன்றாகவே உள்ளது. ஒரு மிக நீண்ட அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் இன்று அறிவாயுத யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. இவ் மறைமுகமான போரில் நாம் வெல்வதற்கு இன்னும் எமது மாணவச் செல்வங்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதறகு தயாராக இருக்க வேண்டும் இதிலும் சமூகம் வெறுமனே கல்விக் கூடங்களில் பொறுப்பை சுமத்தாது சமூகமாக இணைந்து கல்வி நிலையில் மேம்படுத்துவதற்கு முயற்சிக்கவேண்டும் இது அனைவரதும் கூட்டு முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட வேண்டிய ஒர் நிலையாகவே கருத வேண்டும்.
ஒன்றிணைந்த முயற்சியின் விளைவாக எமது மாணவ சமூதாயத்தினை மேன்மை பெற வைப்பது காலத்தின் கடமையாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.