நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது.
காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும்.
வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலைவியாக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இவர் கடந்த வருடமும் இலங்கை அணியில் இடம்பெற்றவராவார்.இவர்களை விட டிலினிக்கா லோச்சனி (15 நி.), மெத்மினி ஏக்கநாயக்க (23 நி.), தனூஷி விஜேசிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.
நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது.
காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.
14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும். வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலைவியாக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இவர் கடந்த வருடமும் இலங்கை அணியில் இடம்பெற்றவராவார்.
இவர்களை விட டிலினிக்கா லோச்சனி (15 நி.), மெத்மினி ஏக்கநாயக்க (23 நி.), தனூஷி விஜேசிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.
|