புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

டமாட முடியாத நிலையில் ஐ.எஸ் தலைவர்: சோகத்தில் தீவிரவாதிகள்



ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபெக்கர் அல்பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் அல்பக்தாதி காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச் மாதம் மேற்கு ஈராக்கில் உள்ள சில நிலைகளைக் குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் விமானத் தாக்குதலை நடத்தினர்.
இதில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு பக்தாதி காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தனது அமைப்பின் தினசரி நடவடிக்கைகளை நேரில் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.
மேலும் அவர் குணமடைந்து வந்தாலும், நடமாட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பக்தாதி பிழைக்க மாட்டார் என்று ஐ.எஸ் உயர் மட்டத் தலைவர்கள் கருதி, புதிய தலைவரை தெரிவு செய்வது குறித்து ஆலோசித்து வந்தனர். ஆனால் தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் பக்தாதி காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad