புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

என்னை அழ வைத்த ஒரு  துக்க செய்தி 
எனது பள்ளி தோழி  திருமதி மஞ்சுளா (நல்லையா ) திடீரென சுகவீனத்தால் காலமாகி விட்டார் .
என்ற  துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .இன்று இலங்கையில் இருந்து கனடா வந்திறங்கியபோது விமான நிலையத்திலேயே  சுகவீனமுற்று திடீரென   எம்மை விட்டு பிரிந்து  சென்று விட்டார் .நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு  நிகழ்வு. என்னோடு நீண்ட காலமாக கமலம்பிகையில் ஒன்றாகவே   கல்வி கற்ற நண்பியும் உறவினரும் என் உயிர் நண்பன் ந.தர்மபாலனின் சகோதரியுமாவார் .  செந்தளிப்பான அழகான தொற்றமுட்டைய யாவர் மிக்க பொறுமையான குணமுடையவர் இவரது குடும்பத்திலேயே அமையும் அடக்கமும் கொண்ட மஞ்சுளாவை நான் 31 வருடங்களாக நேரில் பார்க்க முடி யவில்லை . புங்குட்தீவு 8 ஆம் வட்டாரம் மடதுவேளியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மஞ்சுளா நல்லையா லெட்சுமியின் புத்திரியும் தர்மபாலன் சியாமளா கிருஷ்ணபாலன்  பிரேமிளா ஆகியோரின் சகோதரியும் ஆவார் . இவரின் ஆன்மா சாந்தியடையட்டும் .குடும்பத்தினருக்கு சுவிஸ் வாழ் புங்குட்டுதீவு மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 

ad

ad