புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்


யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.
 
 
மணல் சேவையில் ஈடுபடுவதற்காக மகேஸ்வரி நிதியத்திற்கு செலுத்திய தமது பணத்தை மீள வழங்குமாறு கோரியே யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்க பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை  மேற்கொண்டனர்.
 
 
பல்வேறு வாசகங்களை சுலோக அட்டைகளில் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்ற சங்க உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் தமது கோரிக்கை மனுவை முதலமைச்சரின் செயலாளர் மன்மதராசாவிடம் கையளித்தனர்.
 
 இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு, மாவட்ட அரச அதிபரிடம் மனுவைக் கையளித்தனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் சென்று அவரிடமும் மனு கையளிக்கப்பட்டது.
 
 
மேலும் இந்த மனுவின் பிரதிகள் ஜனாதிபதி, லஞ்ச ஊழல் ஆணையாளர், வட மாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad