அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியை தொடர்ந்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 6 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளது. இதையொட்டி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் 6-வது ஊதியக் குழுவின் குறைபாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியமும், படியும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது