புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

மகிந்த தேர்தலில் போட்டியிடலாம், பிரதமர் பதவிக்காக போட்டியிட முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
எனினும், பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய முடியாது என அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம உள்ளிட்ட தரப்பினர் மகிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.
 
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
கட்சி பிளவடைந்து செல்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கட்சியை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad