புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்: கோத்தபாய- ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்


தற்போது உள்ள அரசாங்கம் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. 
நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவ சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அவர் தாம் மக்களின் தீர்ப்பிற்கு மரியாதை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சி முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர், மோசடிகள் செய்ததாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களிலும் எவ்வித உண்மையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை சீசெல்ஸில் வங்கிக் கணக்குகள் என்று தனக்கு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய கோத்தபாய, தனக்கு இலங்கையிலேயே வங்கிக் கணக்குகள் காணப்படுவதாகவும், அமெரிக்காவில் ஒரு கணக்கு இருந்ததாகவும் பின்னர் அதனை மூடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு அலரி மாளிகையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும்,இராணுவப்புரட்சி பற்றி தாம் எதனையும் பேசவில்லை என்றும் தேர்தலின் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மை பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துமே இதன் போது பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத்பொன்சேகா பற்றி குறிப்பிட்டுள்ள கோத்தபாய,
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்ய தாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், சரத் பொன்சேகாவை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்காது இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைப்பதற்கு ஏதேனும் வழிமுறை உண்டா என ஆராயுமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புலிகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்திய அனைத்து படையினரும் போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஸல் பட்டத்தைப் போன்று எமது இராணுவ வீரர்களும் கௌரமளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தாவின் ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதக்கப்பல் தொடர்பிலான அறிக்கை நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த ஆயுதக்கப்பல், கடந்த ஜனவரி மாதத்தி;ல் காலிதுறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது. இதன்போது அதில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவைää எவென்ட்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதங்களே என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கிவந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த கப்பல் தொடர்பில் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட பலரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ad

ad