புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வாரம் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கல்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் கிடைக்கப்பெற்று, ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்த அனைவரும் அடுத்த வாரம் நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டு புதிய வேதனம் வழங்கப்படும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை நிறைவடைந்து பரீட்சைப் பெறுபேறு வெளியானதும் ஆசிரிய கலாசாலையால் வழங்கப்படும் பெறுபேற்றுப் பத்திரங்களை வைத்து அந்தந்த கல்வி வலயங்கள் மத்திய கல்வி அமைச்சின் உறுதிப்படுத்தலுடன் உள்ளீர்ப்பைச் செய்து வந்தன.
அதற்கு உதாரணமாக தீவகக்கல்வி வலயத்தில் கடந்த காலங்களில் ஆசிரியப் பயிற்சி நிறைவு செய்தவர்களின் பெறுபேற்றுப் பத்திரங்களை அப்போது இருந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன் நேரடியாக கல்வி அமைச்சுக்குக் கொண்டுசென்று உறுதிப்படுத்தி உடனடியாகவே உள்ளீர்பையும் செய்து, வேதனத்தையும் வழங்கினார். அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய கல்வி வலயங்களும் உள்ளீர்ப்பைச் செய்தன.
ஆனால் ஆசிரிய உதவியாளர் நியமனம் கிடைத்து குறைந்த வேதனத்துடனும், அதிக செலவீனத்துடன் கடமையாற்றும் பயிற்சி முடித்து பரீட்சைப் பெறுபேறு கிடைக்கப்பெற்ற ஆசிரியர்களின் உள்ளீர்ப்பு இதுவரை நடைபெறவில்லை என்பதனை வடமாகாணக் கல்வி அமைச்சிடம் எடுத்து விளக்கிய பொதுச் செயலாளர் முன்னைய காலங்களில் நடைமுறைப்படுத்திய விடயங்களை எடுத்துக்கூறி உடனடியாக அவ்வாசிரியர்களை உள்ளீர்ப்புச் செய்து வேதனத்தை வழங்குமாறு கோரியிருந்தார். 
அதனை ஏற்றுக் கொண்ட வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் அவர்களின் உள்ளீர்ப்புக் கடிதங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்ததும் அடுத்த வாரம் அவை நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அத்தோடு மத்திய கல்வி அமைச்சு அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு நிலைமையைத்  தெளிவுபடுத்தியுள்ளார்.

ad

ad