புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவல்

கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியாக்கிய இந்த சம்பவம் குறித்து, ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், சனிக்கிழமை சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம், முருகப்பாடி, வேட்டக்கிரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

உண்மை கண்டறியும் குழுவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது உலகிலேயே நடந்த மிகப்பெரிய கொடூரம். இதுவேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, சித்ரவதை செய்து கொன்றது தெரிய வந்தது. குறிப்பாக கண்கள் காணவில்லை. சித்ரவதையை மறைப்பதற்காக ஆசிட் ஊற்றியுள்ளனர். எந்தளவுக்கு கொடூரம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு செய்துள்ளனர் என்றார். 

ad

ad