ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி  ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெழுத்தினை பெறும் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் கையெழுத்தினை மக்களிடத்தில் நேரடியாக பெறும் செயற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேரடியாகவும் இணைய மூலமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்துப் போராட்டமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒன்றாக சிங்கள மொழியிலும்

முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது தென்னிலங்கையில் கடும் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
லண்டனில் இடம்பெற்ற பொதுநிகழ்வுகளில் கையெழுத்து வேட்டை  :
2015-03-26 21.06.26
2015-04-11 13.34.58
2015-04-12 17.54.32