புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான


கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்தும் போட்டியிடுவதற்கு பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐ.ம.சு.மு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு என்ற பெயரில் தேர்தலில் களமிறங்குவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். அதேநேரம், ஐ.ம.சு.முவில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட விரும்பினால் போட்டியிட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.ம.சு.மு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 19வது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு. பட்டியலில் போட்டியிட இடம்வழங்குவதில்லையென்ற நிலைப்பாட்டுக்கு ஐ.ம.சு.மு தலைமைத்துவம் சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இது இவ்விதமிருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துடன் இணைவதற்கும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும் கட்சி எடுத்த தீர்மானத்தை விமர்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பந்துல குணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, ரி.பி.ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்த் தன, சாலிந்த திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. என்ன காரணத்து க்காக நீக்கப்பட்டோம் என்பது அறிவிக்கப்படவில் லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டுமெனக் கோரி சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டிருந்தனர். பந்துல குணவர்த்தன இது தொடர்பில் முன்னின்று செயற்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ad

ad