புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே திருமணம்; நெருங்கிய தோழியை மணந்தார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தனது நெருங்கிய தோழியான கிம் சீர்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

பிரிட்டனை சேர்ந்த டென்னிஸ் வீரர் 27 வயது ஆன்டி முர்ரேவும் கிம் சீர்சும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கிம் சீர்ஸ் ஆன்டி முர்ரேவின் பயிற்சியாளர் நைஜல் சீர்சின் மகள் ஆவார். கடந்த நவம்பர்  மாதம் இருவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
 ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ அருகில் உள்ள ஆன்டி முர்ரேவின் சொந்த நகரமான டன்பிலேனின் மிகப்பழமையான கதீட்ரல் ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திருமணச்சடங்குகள் நடைபெற்றது. திருமணச் சடங்கில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்டி முர்ரே பாரம்பரியமான ஸ்காட்லாந்து நாட்டின் உடையணிந்திருந்தார். கிம்சீர்ஸ் வெள்ளை நிற  பட்டாடை உடுத்தி தேவதை போல காட்சியளித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த திருமண சடங்கின் போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
முன்னதாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஆன்டி முர்ரே தம்பதிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது வீதிகளில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆன்டிமுர்ரே- கிம் சீர்ஸ் வரவேற்பு நிகழ்ச்சி ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர் நகரில் உள்ள குரோம்லிக்ஸ் ஹவுஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த ஹோட்டல் ஆன்டி முர்ரேவுக்கு சொந்தமானது. 

 

ad

ad