புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: எஸ்.எம். சந்திரசே



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான நான் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
பதிவுத் தபால் ஊடாக பணி நீக்கப்பட்டமை குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடிதத் தலைப்பைக் கொண்ட குறித்த கடிதத்தில், கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டிருந்தார்.
எனினும், என்ன காரணத்திற்காக நான் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போட்டியிடச் செய்ய வேண்டுமென்ற நோக்கில் ரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தேன்.
இதன் காரணமாகவே நான் விலக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றேன் என எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளா

ad

ad