மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல் காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
பல காலமாகவே அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையில் உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கைகுலுக்கிக் கொண்டது, இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ள தாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் நடவடிக்கையின் முதற் கட்டமாக, வாஷிங்டனில் கியூபாவும், ஹவானாவில் அமெரிக்காவும் தூதரகங்களைத் திறக்க முயற்சி செய்து வருகின்றன.
ஆனால் இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `இரு தலைவர் களும் கைகுலுக்கிக் கொண்டது ஒரு சாதாரண நிகழ்வுதான். அவர் கள் இருவரும் பெரிய அளவில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக, தீவிரவாதத் துக்கு நிதி உதவி செய்யும் நாடுகள் குறித்து அமெரிக்கா தயாரித்துள்ள பட்டியலில் கியூபா இருந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கியூபாவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கலாம் என்று வெள்ளை மாளிகைக்குப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் இருந்து, தான் நீக்கப்படுவதுதான் அமெரிக் காவிடமிருந்து கியூபா எதிர்பார்க் கும் முக்கியமான விஷயம். அவ் வாறு நீக்கப்பட்டால் அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் குறைந்த அளவிலாவது பொருளாதார பரி வர்த்தனைகளை கியூபா மேற் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.