புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015


புங்குடுதீவுப் பெண் கடல் சீறாது அது பொங்கினால் உலகம்
தாங்காது என்டு என்னொட அம்மம்மா 

சொல்லுரவா. அத நான் சின்னஞ் சிறுவனாய் இருக்கும் போது கேட்டு இருக்கிரன். இப்போது புரிகிறது கயவர்களே..
ஒரு கொடிய இரவில் இரவு 12 மணி. நாய் குழைக்குதே என்டு மெல்ல எழும்பி யன்னலால பாத்தா வீதியில் சைக்கிள்கள் ஊர்ந்து போகின்றன. மெல்ல பின்னால் போனேன்.
டோச் லயிட் சில வீடுகளை நோக்கி மின்னின. அது அவர்களின் சமிஞ்ஞை. அந்த வீட்டில் இருந்து ஒருவன் இணைந்து கொண்டான். மறுனால் ஆலடியில் இருந்து ஒரு
செய்தி. பிள்ளை போல் வளர்த்த 5 கோழிகள் தலை பிடுங்கி கொல்லப்பட்டதாய். ஒரு ஆண்மகன் கண்ணீர் விட்டு அழுதான். தன்
பிள்ளைகளில் ஐந்தை இழந்ததைப் போல். புங்டுதீவில் வறுமை இயற்கையானது இல்லை.
அது இந்த நாதாரிகள் பரிசாய் எமக்கு அளித்தது.
(3) 20/05/2015
வீராமலையில் ஒரு தாத்தா இருந்தவர். 2014 தை அல்லது மாசியில் காலமானார். அவரின் கடைசி இரவில் வீட்டு முற்றத்தில் கிடந்து உடல் வேதனையில் அயல் வீடுகளுக்கு கேட்கும் அளவிற்கு கத்தி முனகினார். அயலில் இருந்தவர் யாரும் உதவியிற்கு செல்ல பயந்து கேளாதவர் போலவேயே இருந்து விட்டனர். காலையில் உயிர் அற்ற உடலை கண்டோம். வெளியில் செல்ல பயந்த காரணம் இந்த நாதாரிகள் வேலிக்கையோ படலைக்கு உள்ளையோ நிப்பாங்கள் என்ட அவரவர் மரண payam. ஒரு அம்மம்மாட சொன்னன்
"கோழி வளர்ப்பம் என்டு.. அவா sonnaa கோழி வளர்த்தா செத்திருவன். கோழிக்காக என்ன கொன்டுடுவாங்கள்"
சாவிலும் ஒருவாழ்விருந்த கிராமம். இன்று ஒரு துண்பம் மரணம் கண்டு துடிக்க கூட முடியவில்லை. அபயக்குரல் கேட்டு எனியாவது நாங்க ஓடிப்போக வேனும். அதுக்காகவேனும்
‪#‎கொல்லுங்க‬ சார் அவங்களை..
(2) 19/05/2015
இந்த கும்பலால் தான் புங்குடுதீவு கிழக்கூர் சுடலை போல் ஆனது. கொள்ளை அடிக்க வசதியா கடைசியாக பெரிய அசோக் லேலன்ட் லொறியும் கொண்டு வந்திடாங்கள். ஸசி என்பவனின் அண்ணன் வெளினாடு இருந்து வந்தா இந்த கொள்ளையர் கூட்டம் முகம் களுவுரது வாய் கொப்பளிப்பது குடிப்பது குளிப்பது எல்லாமே சாராயம் தான்.
இந்த கதையின் கதா நாயகர்கள் இப்போ கூண்டோடு கைலாசம் போகினமாம். தாயே உன் இழப்பு தாங்கும் தரம் அன்று. ஆனால் உன் முடிவோடு விடிகிறது கிழக்கூர்..
உன் வாழ்வு ஒரு சரித்திரம்..
(1) 16/08/2014
வாழ்வின் அர்த்தம் புரியாத ஒரு சமுதாயம் எங்களின் புங்குடுதீவில் இப்போது உருவாகி வருகிறது. அதற்காக அவர்களைச் சொல்லி குற்றமில்லை... கிணற்றுத்தவளைகளாய் வாழ காலத்தாயே சதி செய்தாள். ஆதலால் அவர்களின் மாசுற்ற எண்ணங்களுக்கும் கறை படிந்த செயல்களுக்குமாக அவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் எந்த நியாயமும் இருக்கப்போவதில்லை.
ஆனால் நிதர்சனம் மீளாய்வு செய்யபடவில்லையாயின், மண் பற்றாளர்களின் தொலை நோக்கு பார்வை சரியான திசையில் இன்று அமையவில்லையாயின் தந்தை செல்வா கூறிய பாணியில் கூறுவதாயின் சிங்களவனிடம் இருந்து புங்குடுதீவு மக்களை கடவுள்தான் காக்கவேண்டும் என்பதற்கப்பால் புங்குடுதீவு மக்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள கடவுளே சிங்களவனின் காலில் விழுவதைப்பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்.
மன்னிக்கவும், மண்ணின் நிலைமை எவ்வளவு மோசமாய் உள்ளதென்பதை விபரிக்க இதை விட வார்த்தைகள் எனக்கு
கிடைக்கவில்லை. ஆதலால் மிகச் சிரத்தை எடுத்து மண்ணின் உண்மையான களநிலை அறிந்து தேவை என்ன என்பதை துள்ளியமாய் கணித்து களமிறங்கினால் உங்கள் கனவுகள் வீண்போகாதென்பது என் எண்ணம். அன்றில் உங்கள் உழைப்பு பெருங்கடலில் கரைத்த அமிர்தம் போல் அர்த்தம் அற்றுப் போகலாம்.
இன்று வறண்டு போன புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கும் பொலிவிழந்த மாளிகைகளினதும் கூரை இழந்த மாடங்களினதும்
வரலாறு கடல் கடந்து வந்த செல்வத்தினால் எழுதப்படவில்லை, எறும்புகளோடு ஒத்த எம் மூதாதையர் உழைப்பும் சேமிப்புமே
90 களில் எம்மூர் அழித்த ஆக்கிரமிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. எங்களூரின் செல்வங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளை அலங்கரிக்க அள்ளிச்செல்லப்பட்டது உலகறிந்தது. ஆனாலும் கல்லுக்குள்ளும் ஈரம் உண்டென்பதற்கு ஏற்ப ஆக்கிரமிப்பாளர்கள் புங்குடுதீவில் வீடுகளையும் கோவில், பாடசாலைகளையும் பொது இடங்களையும் ஈனத்தனமாய் உடைத்தெறிந்ததாய் பதிவுகள் மிகமிகக் குறைவு. நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
அன்பார்ந்த மண்ணின் உறவுகளே, இடப்பெயர்வு நடந்தேறிய 1990 இல் இருந்து 2009 மே 18 வரையில் ஏறக்குறைய 19
வருடங்களில் நடைபெறாத அழிவு அடுத்து வந்த சில வருடங்களில் நம் ஊரவர்களாலேயே, நம் உறவுகளாலேயே நடந்தேறியது. நடந்து கொண்டு இருக்கிறது. பெருங்காட்டில் ஒரு அந்திசாய்ந்த இரவில் ஒரு முதியவர் ஒரு கடைவாசலில் எனக்கருகில் நின்ற லொறிச் சாரதியிடம் 18 நிலைகளை யாழ் கொண்டு செல்ல பேரம் பேசியபடி நின்றார். நினைத்து பாருங்கள், அந்த 18 நிலைகளுக்காக எத்தனை வீடுகள் சினனாப்பின்னமாகியிருக்கும்?
காவல்துறை கண்களால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்தறிந்ததும் பொய், தன்னை
"அதிகமாய் கவனிப்பவன்" சொல்வது மட்டுமே மெய் என நடந்து கொள்கிறது. அல்லாது விடில் இரவு இரவாய் கும்மிருட்டில் பாதியளவு களவாடப்பட்ட கூரை ஓடுகளை "பொலீசில் சொல்லுவேன்" என்றதும் பட்டப்பகலில் பகிரங்கமாய் முழுவதுமாய் கழற்றி யாழ்ப்பாணம் ஏற்றி அனுப்பி விட்டு "எங்கடா பொலீசு, கூட்டிக்கொண்டா அவனை" என்று நெஞ்சு நிமிர்த்தி
பகிரங்கமாய் சவால் விட யாருக்கு முடியுமாய் இருக்கும்? (இது புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் தை 2014 இல் இடம்பெற்றது)
காலக்கரைதலில் சாட்சிகளாகிப்போன காட்சிகளில் இன்னும் சில பதிவுகள் இதோ:-
சிறுவர் பாடசாலையாம் இராஜேஸ்வரியில் நலன்விரும்பி ஒருவரால் அமைத்து கொடுக்கப்பட்டிருந்த மின்னினைப்பு முழுவதும்
அறுத்தெறியப்பட்டுள்ளது. அதே பாடசாலையின் மேசை ஒன்று களவாடப்பட்டு, களவாடியவர் அடையாளம் காணப்பட்ட
நிலையில் மீண்டும் அது பாடசாலை வளாகத்தினுள் மதிலின் மேலால் வீசப்பட்டு கால்கள் உடைந்த நிலையில் மனிதாபிமானம்
அழிந்து போனது என்பதற்கு சாட்சியாய் இன்று ஒர் ஓரமாய் கிடக்கிறது.
அன்று ஓடாய் உழைத்தும் இன்று சாகும் வயதினில் ஆசைக்கு ஒரு தோடோ , ஒரு சங்கிலியோ போட முடியாத, மடியில் ஒரு
மயில் தாள் வைத்திருக்க முடியாத ஆற்றாமையில் புலம்பி அழும் வயோதிபக்குழந்தைகளின் ஒப்பாரிப் பாடல்கள் கோயில்
முகடுகளில் முட்டி மோதுகின்றன. ஏனெனில் அதுவே நின்மதியாய் வாழத்துடிக்கும் அவர்களின் ஆசையில் மண்ணைத்தூவி இயமனாய் மாறி நாளை பாடையில் கிடத்தும் காரணியாய் மாறலாம். ஏன்!! அந்த மதுரை எரித்த கண்ணகித் தாயே எனினும் கிழக்கூரில் காவலர் இல்லாமல் தனித்திருக்க முடியாது.
வாயில்லா பசுக்களின் பாடு சொல்லி மாளாது. பிறந்த கன்றின் வயிற்றில் குறிபோட அலையும் ஈனவரின் தொட்டிலாகிப் போனது எமது ஊர். தொண்டை இறுக்கும் நைலோன் கயிறுடன் சில பசுக்கள், கயிறு இறுக்கி குழம்புடன் துண்டாகிப்போன நொன்டிக் கால்களுடன் சில பசுக்கள், முன்னங்கால் பொருந்தும் விலா எலும்பருகில் பாரிய வெட்டுக்காயத்துடன் மூன்று கால்களுடன் நின்று காயம் பட்ட நாலாம் காலை தூக்கவும் முடியாமல் நிலத்தில் பதிக்கவும் முடியாமல், நின்ற களைப்பு தீர நிலத்தில் படுக்கவோ தாகம் அடக்க நீர் நிலை நோக்கி நகர கூட முடியாமல் கடும் வெயிலில் கோழி தலையை தூங்க போட்டது போல் தலையை தூங்கப்போட்டபடி நின்ற ஓர் தாய்ப்பசுவின் அவலத்தை உங்களால் உணர முடிகிறதா?
உங்கள் வீட்டு முற்றமோ, பெரியவீடோ , தென்னம்பிள்ளையோ நீங்கள் இல்லாதவிடத்து எம்மவரின் தடவு பொருளாகி விடும். பயணப்பையுடன் கொழும்புக்கே புறப்பட்டாலும் யாழ் போய் மாலை திரும்பி வருவதாய் கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து சத்தியம் செய்யாத குறையாய் பொய் கூறி பஸ் ஏறும் கொடுமை ஆலடியில் அன்றாடம் நடக்கிறது.
புங்குடுதீவின் கிழக்கூரில் (9ம் 10ம் வட்டாரம்) அதிகாலைத்தேவியின் துயிலெழுப்புப் பாடல்களில் கோழிகளினதும் சேவல்களினதும் இன்னிசைக் குரல்களை கேட்க முடிவது இல்லை. ஆலடிச் சந்தியில் ஒரு இளைய குடும்பஸ்தன் கண்ணீர் விட்டு அழுதான். இந்த ஊரில் மனிதராய் மனிதர்கள் வாழ முடியாது. விரைவில் புங்குடுதீவை விட்டு போகபோகிறேன் என்றார்.
சொல்ல சொல்ல நீளும் முடிவற்ற தொடர்கதை, இது புங்குடுதீவு படைக்கும் புதுமைக்கதைகளில் சில துளி.
யுத்தம் கிள்ளியெறிந்த ஒரே மரத்தின் பழங்களில் பல கரைகளில் வீழ்ந்தன. சில சகதியில் புதைந்தன. இப்பொழுது கரைகளில் வீழ்ந்து முளைத்த வீரிய விருட்சங்களாகிய புலம்பெயர் உன்னத உறவுகள்; உங்களின் கைகளிலேயே சகதியில் புதைந்த விதைகளின் வாழ்வு தங்கியுள்ளது. வீரிய விருட்சங்களின் பணி, தாம் இம்மண்ணில் பிறந்தோம் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளமிடலை எங்கோ ஒரு மூலையில் இட்டு செல்வதல்ல. அது எங்கள் மரபும் அல்ல. அப்படி எனிமேல் எம்மால் வாழவும் முடியாது,
ஆள வேரோடி அறிந்தவற்றில் நன்மைகளை எங்கள் மண்ணுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பகிர்தலின் ஊடாய் உலகை அவர்கள் வலம் வந்து பார்க்கட்டும். உதாரணாமாய், இசையால் ஈழத்தமிழுலகை கட்டிப்போட்டவர்களில் புங்குடுதீவுக்கே அறுதிப் பெரும்புகழ் சேரும். இன்றும் பண்ணிசையில் எம்மவரின் இசைக்கு இணையான இசை வல்லமையை நயிணை நாகபூஷணி ஆலயத்திலும் கேட்க முடியாது. ஆனால் அதற்குள்ளும் ஓர் தலைமுறை இடைவெளி. தங்களுக்குள் புதைந்து கிடக்கும் இசை ஆளுமைகள் தெரியாமல் இலை மறை காயாக இளமொட்டுக்களின் காலம் நகர்கின்றது. இனிய குரல்கள் பனை தென்னைகளில் தெறித்து கடல்காற்றில் கலந்து மறைகின்றன

ad

ad