புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு





புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு, இல்லையேல் எம்மிடம் கொடு, பெண்ணே விழித்திரு உலகம் உன் கையில், திட்டமிட்டு செய்த செயலை சாராயத்தின் மீது சுமத்த பொலிஸாரே இடமளியாதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கண்'டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் அமைப்பு, இளைஞர் கழகம், குருக்கள், அருட்சகோதரிகள், பல்கலை மாணவர்கள், கியூடெக் நிறுவனம், மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் அனைத்து அமைப்புக்களும் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி! - சகோதரன் நிஷாந்தன்
பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கில் நடப்பது என்ன? குற்றவாளிகளை தப்பிக்க செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
என்பன தொடர்பாகவும், லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தனது சகோதரியின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை தப்பிக்க வைக்க பொலிஸாரும் வழக்கறிஞர் ஒருவரும் முனைப்புடன் செயற்படுவதாக கூறி தனது  மனக் குமுறல்களையும் வெளியிட்டுள்ளார் வித்தியாவின் சகோதரன் நிஷாந்தன்.
வழக்கு தொடர்பில் என்ன செய்வதென்றே தெரியிவில்லை என்று தங்கள் குடும்ப நிலையினையும் லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.

ad

ad