வீதிகளை மறித்து ரயர்கள் எரித்தல் போக்குவரத்துக்களை தடைசெய்தல் நீதிமன்ற கட்டடத்தொகுதி மீதும் கடைகள் மீதும் பொலிஸ் மற்றும் வாகனங்கள் மீதான கல்லெறிகளாகவும் மாறியுள்ளது.இந்த விசமச்செய்ல்களை போராட்டக்கார்களிடையே ஊடுருவியுள்ள சில காடையர்கள் மேற்கொள்வதாக போராட்டக்காரர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மது வெறியினால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுக்கு எதிராக உணர்வு பூர்வமாக வெளிக்காட்டவேண்டிய எதிர்ப்புக்களை சிலர் மதுவெறியிலும் வேறு நோக்கங்கங்களுடனும் திசைதிருப்புவதாகவும் இதனால் பொதுச்சொத்துக்களுக்கு பாதிப்பு எற்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றக்கட்டடத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்தாக்குதலை அடுத்து பொலிசார் கண்ணீர்புகைக்குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
சில ஆர்ப்பாட்டக்கார்களின் கோலங்களையும் நடவடிக்கைகளையும் அவதானிக்கும் போது உண்மையில் அவர்கள் எதற்கு போராடுகின்றார்கள் வித்தியாவிற்காக வருந்துகின்றார்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிலமை கட்டுமீறி செல்வதை தடுக்க நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்