புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

சுவிசுக்குத் தப்பிச்செல்ல முயன்ற வித்தியா கொலை சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல்
வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுவிஸிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், சந்தேகநபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்இதேவேளை, சுவிஸிலிருந்து இலங்கை வந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு வித்யா கொலையுடன் நேரடித்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த புங்குடுதீவு பிரதேச மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்குச் சென்ற சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறித்த நபரை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அவரைத் தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் பிரதேசமக்கள் குறித்த சந்தேகநபரை சட்டத்தரணியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், வித்தியாவின் கொலை தொடர்பில் வடமாகாண பொலிஸ் மாஅதிபருடன், சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பகுதிக்கு இன்று காலை மீண்டும் சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில், சந்தேகநபர் மகாலிங்கம் சிவகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ளதாகவும், அவர் சுவிஸ்ஸிற்கு இன்று பிற்பகல் தப்பிச் செல்லவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு கிடைத்த செய்தியினை அடுத்து அவர்கள் சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பியதுடன், சந்தேகநபரை ஒப்படைக்குமாறும் கோரினர்.
இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வி.ரி.தமிழ்மாறனின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ad

ad