புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

பொதுமக்கள் எதிர்ப்பினால் வாரணாசியில் இருந்து தப்பி ஓடிய நித்தி!

நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோவில் தோன்றியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான பிரபல சாமியார் நித்யானந்தாவுக்கு
பல்வேறு ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் தொடர்ந்து எதிர்ப்புகள் காணப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் இதனால் வழக்குகளையும் நித்யானந்தா சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் தனது ஆன்மிக நிகழ்ச்சிகளை உத்தரபிரதேசம் வாரணாசியில் 21 நாட்களுக்கு நடத்துவதற்கு அவரும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா வாரணாசிக்கு சென்றிருந்தார். நித்யானந்தா வருகையை யொட்டி நகரம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ்கள், பேனர்கள் என்று அமர்க்களப்படுத்தியிருந்தனர். ஆனால் ஆன்மிக நகரமான வாரணாசியில் செக்ஸ் புகாரில் சிக்கி சர்ச்சைக்குரிய நித்யானந்தாவுக்கு மிகவும் ஆடம்பரமாக பிளக்ஸ்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பக்தர்கள் மனதை புண்படுத்தியது. பொதுமக்கள் மத்தியிலும், யாத்ரீகர்கள் மத்தியிலும் மிகுந்த முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக காணப்பட்டது. 

‘செக்ஸ் புகார் உள்ளிட்ட புகார்களில் சிக்கி விட்டு ஆன்மிக வேடம் போடுவதா’ என்று வாரணாசியில் உள்ள பெண்கள் அமைப்பினர் கொதிப்படைந்தனர். இதனால் மகளிர் அமைப்பினர், பனாரஸ் பல்கலை கழக மாணவர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ‘புனித வாரணாசியை விட்டு நித்யானந்தாவே வெளியேறு’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த நித்தியானந்தாவின் பிளக்ஸ் பேனர்களை அடித்து நொறுக்கியும், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். புனித நகரமான வாரணாசியை விட்டு நித்யானந்தா உடனடியாக வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது. 

அங்கு போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நித்யானாந்தாவை நான்கு தினங்களுக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபடும் என மாவட்ட அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கிடையில் தனது நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்து விட்டு நேற்று இரவோடு இரவாக நித்யானந்தா வாரணாசியை விட்டு ஓட்டம் பிடித்ததாக அவர் தங்கியிருந்த ஆசிரம நிர்வாக தரப்பினர் தெரிவித்தனர். தனது ஆதரவாளர்கள் சிலருடன் வாரணாசியை விட்டு ஓட்டம் பிடித்த நித்யானந்தா எங்கு சென்றார் என்பது குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகவும் நிர்வாக தரப்பினர் தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தால் வாரணாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad