புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

சந்தேக நபருடன்,சட்டத்தரணியும் நாளை 12 மணிக்கு ஆஜராவர் : உறுதியளித்தார் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

 
இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே  சட்டத்தரணி தமிழ்மாறனை பொலிஸாருடன் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி பொலிஸாரது வாகனத்தை இடைமறித்து புங்குடுதீவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
 
 இதனால் பொலிஸாருக்கும்,மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.பின்னர் இந்த முறுகல் நிலை தொடர்ந்ததால் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பொதுமக்களுக்கு உறுதிமொழி ஒன்றினை வழங்கினார்.
 
அதாவது, நாளை மதியம் 12 மணிக்கு  கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் சட்டத்தரணி தமிழ்மாறன் ஆகியோர் இருவரும் யாழ்.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று புங்குடுதீவு பொதுமக்களுக்கு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.
 
 
எனினும் பொதுமக்கள் அவரது உறுதிமொழியை ஏற்கவில்லை.சிலர் மாத்திரமே அவரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டனர்.
 
இதேவேளை சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பிரதேசத்தில் இருந்து அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து குறித்த இடத்தை விட்டு சென்றனர்.ஆனாலும் பொதுமக்கள் அவர்களை கண்ணோடும் விதத்தில் குறித்த பிரதேசம் மட்டுமல்லாது மூளை முடுக்கெல்லாம் மக்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ad

ad