மாணவி வித்தியா கொலையின் சந்தேகநபரான சுவிஸ் ஆசாமி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டமென்ற கோசத்துடன் மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதில், பொலிஸ் வாகனங்கள், நீதிமன்ற கட்டிட தொகுதி என்பன சேதமடைந்துள்ளன. அத்துடன் பொலிசார் இருவரும் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி பொலிசார் தடியடி நடத்தியபோதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நீதிமன்ற வளாகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.
காமுகர்களிற்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் அல்லது தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கொந்தளித்து கொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைமீறி சென்று, நீதிமன்றத்தின் மீதும் கற்கள், தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கீ