புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை: பந்துவீச்சில் சுருண்ட சென்னை (வீடியோ இணைப்பு)


ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் தகுதிச்சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதின
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா,
முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன் படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய சிம்மன்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் கடந்து 65 ஓட்டங்களும், விக்கெட் காப்பாளர் பார்த்திவ் படேல் 35 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்டத்தை வெகுவாக உயர்த்தினர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் ஷர்மா 19 ஓட்டங்களும், பொல்லார்டு 41 ஓட்டங்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை சார்பில் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 188 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான டுவைன் ஸ்மித் 4வது பந்திலேயே ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஹஸ்சியும் 16 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க சென்னை அணி 10.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தவித்தது.
அடுத்து களமிறங்கிய பிராவோ 20 ஓட்டங்களும், ஜடேஜா 19 ஓட்டங்களும், நெகி 3 ஓட்டங்களும், அஸ்வின் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டுபிளசிஸ் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
19 ஓவரில் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 162 ஓட்டஙகள் மட்டுமே எடுத்து 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
மும்பை சார்பில் மலிங்கா 3 விக்கெட்டும், வினய் குமார், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக பொல்லார்டு தெரிவானார்.

ad

ad