புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்


பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாக்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வேண்டி ஆத்ம சாந்தி கிரிகையும் அன்னதானமும் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானத்தில் இன்று காலை10.05 க்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காகவேண்டி ஆத்த சாந்தி கிரிகையும், அன்னதானமும் மிகவும் எழுச்சி பூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மற்றும் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளமலை) ம.நடராசா, கோ.கருணாகரம், மு.இராஜேஸ்வரன்,  மற்றும் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கோபிகாந், நாவிதன்வெளி முன்னாள் பிரதேசசபை தவிசாளர் எஸ்.    குணரெத்தினம், திருக்கோயில் தவிசாளர் புவிதராஜன்,  பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம, மட்டக்களப்பு இளைஞரணித்தலைவர் கி.சேயோன், மாநகரசபை உறுப்பினர்கள், சமய பெரியார்கள்,கிராம பெரியார்கள் முதியோர் கங்க உறுப்பினர்கள், பெண்கள் அபிவிருத்தி சங்க கழகங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது அம்பாறை கல்முனையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றுது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகர்த்தெறிந்து முள்ளியவாய்க்காலை நினைவுகூர முன்வர வேண்டும்: இராஜேஸ்வரன் மா.உ
கடந்த கால ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து தமிழ் மக்கள் முள்ளியவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் இன்று முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முருகன் ஆலயத்தில் நடைபெற்றபோது, ஆலயம் செல்ல முடியாத கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஆலயத்திற்கு வெளியில் விளக்கேற்றி முள்ளியவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வடகிழக்கில் படையினராலும் ஆயுதக்குழுக்களினாலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.
முள்ளியவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாய கடமையென இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த கால ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து தமிழ் மக்கள் முள்ளியவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் இன்று அவர்களின் நினைவுகூரலை தடுக்க நினைப்பது எம்மை தொடர்ந்து அடிமைகளாகக்கலாம் என்ற மனநிலையிலேயே சிலர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

ad

ad