புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம்: பிடித்து தரும்படி மக்கள் கொந்தளிப்பு!




புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர்
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சமாதானம் செய்து வருகின்றார்.
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தையடுத்து வன்முறைகள் அதிகரித்திருந்த நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்ப நிலையில் உள்ளது.
கசங்கிய முல்லையானாள் வித்தியா!
கழிப்பறையில் பிறந்தவர்கள்  உன்னை கற்பழித்த காடையார்கள்  வெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ கடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய்.
கடந்த வாரம் காமக் கொடூரர்களால் பாலியல் சித்திரவதைக்குட்பட்டு யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டாள்.

வித்தியாவுக்காக மட்டு மதியகன் எழுதிய கவிதை.

உன் கன்னங்களால் வழிந்த நீருக்கு 
கையாலாகாத நாம்
வஞ்சத்தை வார்த்தையால் 
கொட்டிவிடவே முடிந்தது .....

ad

ad