புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்ச நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் நகரில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை புங்குடுதீவில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் கொலையாளிகளை காப்பாற்ற முயலும் சட்டத்தரனி தமிழ்மாறனால் அப்பகுதி மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















