புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

சுவிஸ் ஒன்றியம் நடத்திய கண்டன கூட்டம் படங்கள்

005சுவிஸ் ஒன்றியம் நடத்திய கண்டன கூட்டம் படங்கள் 
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இன்று 17.05.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. முதலில் சபையோரை வணங்கி வரவேற்று வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளுக்கு சட்டமும் நீதியும் தம் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்றும் தலைமை வகித்தவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து வித்தியாவின் குடும்ப உறவினர்களான திரு. தம்பிஐயா செல்வராஜா அவர்கள் நினைவுச் சுடரினை ஏற்ற, திரு.திருமதி. பத்மராஜா குடும்பத்தினர் மலர்மாலை அணிவிக்க, திருமதி. ராதிகா ஈசன் அவர்கள் மலர் அஞ்சலியை செய்யதனர்.
அமைதி வணக்கத்தினைத் தொடர்ந்து, சபையோர்கள் மலராஞ்சலியும், தீபாஞ்சலியும் செய்யும் சமநேரத்தில் ஞானலிங்கேச்சுரர் ஆலய சசிதரன் ஐயா அவர்களின் இரங்கலுரை நடைபெற்றது.
தொடர்ந்து புங்குடுதீவில் இருந்து “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவர் திரு. சண்முகலிங்கம் அவர்கள் தொலைபேசி மூலம் தமது இரங்கலுரையை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் திரு. சண் தவராஜா அவர்கள், லவுசான் மானில எஸ்.பி கட்சியைச் சார்ந்த திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள், தமிழ்க் கல்விச் சேவைத் தலைவர் திரு. உதயபாரதிலிங்கம் அவர்கள், திரு. பொலிகை ஜெயா அவர்கள், திரு. வாவி பாஸ்கர் அவர்கள், ஒன்றியத்தின் உபசெயலாளர். திரு. துரைராஜா சுவேந்திரன் அவர்கள். எமது ஒன்றிய ஆலோசனைச் சபை உறுப்பினர்களான திரு. சிவசம்பு சந்திரபாலன் அவர்கள், திரு. செல்வரெட்ணம் சுரேஸ் அவர்கள், ஞானலிங்கேச்சுரர் ஆலய முரளி ஐயா அவர்கள் மற்றும் திருமதி. சிவாஜினி தேவராஜா அவர்கள், திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தராஜா போன்றோர் தமது காட்டமான இரங்கல் உரைகளைப் பதிவாக்கினர்.
கவிதாஞ்சலிகளாக திரு. கேதீஸ்வரன் அவர்கள், திரு. மோகனதாஸ் அவர்கள், திரு.ரமணதாஸ் அவர்கள், திரு. மதி போன்றோரின் உருக்கமான கவிதைகள் இடம் பெற்றன. வணக்கத்துக்குரிய ஒல்ரென் சுந்தரேஸ்வரக் குருக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் உபதலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஏற்புரையுடன் நன்றிஉரையும் வழங்கினார். திரு. ரமணதாஸ் அவர்களால் இந்த நிகழ்வின் நோக்குப் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. திரு. மதி அவர்களின் கண்டன அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது.
மண்டபம் நிறைந்த மக்கள் இறுதியாக எழுந்து நின்று தங்கள் கலைமகளான வித்தியாவிற்கு மௌன அஞ்சலி செலுத்தலுடன் கண்டனக் கூட்டமும் கண்ணீர் அஞ்சலியும் இரவு 8.30 மணியளவில் நிறைவிற்கு வந்தது.
குறுகியநேர அறிவித்தல் (முதல்நாள் மாலை) விடுத்தும், மண்டபம் நிறைந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வண்ணம்,
செயலாளர்,
த.தங்கராஜா. 
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
தகவல்…
சுவிஸ்ரஞ்சன்,
உபதலைவர் & ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
DSC_9088
DSC_9090
DSC_9091
DSC_9092
DSC_9093
DSC_9095
DSC_9097
DSC_9098
DSC_9102
DSC_9104
DSC_9105
DSC_9107
DSC_9108
DSC_9109
006
007
009
DSC_9080
DSC_9081
DSC_9082
DSC_9083
DSC_9111
DSC_9112
DSC_9114
DSC_9115
DSC_9119
DSC_9120
DSC_9121
DSC_9123
DSC_9124
DSC_9125
DSC_9126
DSC_9127
DSC_9128
DSC_9129
DSC_9130
DSC_9134
DSC_9136
DSC_9138
DSC_9139
DSC_9142
DSC_9143
DSC_9148
DSC_9151
DSC_9152
DSC_9155
DSC_9157
DSC_9158
DSC_9160
DSC_9162
DSC_9166
DSC_9168
DSC_9172
DSC_9173
DSC_9177
DSC_9178
DSC_9181
DSC_9185
080
DSC_9110
DSC_9113
DSC_9132
DSC_9135
DSC_9141
DSC_9145
DSC_9147
DSC_9149
DSC_9153
DSC_9154
DSC_9156
DSC_9159
DSC_9161
DSC_9163
DSC_9167
DSC_9170
DSC_9175
DSC_9180
DSC_9088
     

 

- See more at: http://www.swisspungudutivu.com/?p=59839#sthash.AKXmel9m.dpuf

ad

ad