புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும்
முகமாக இன்று அஞ்சலி செலுத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போர் வெற்றியை கொண்டாடும் முகமாகவும் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு விகாரமாஹாதேவி பூங்காவிற்கு பொது மக்கள் அனைவரையும் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைவரையும் ஞாபகமூட்டுவதற்காக என்னுடன் இணையுங்கள்.
எங்களது வீரர்களை நினைவில் வைத்திருக்கும் முகமாக உங்கள் வீடுகளில் மாலை 6:05 இற்கு விளக்கேற்றுவதிலும் அனைவரும் சேர்ந்து இணைந்து கொள்ளுங்கள் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
மஹிந்த ராஜபக்ச தலைமையில் தற்பொழுது விகாரமாஹாதேவிப் பூங்காவில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இந் நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச பெளத்த பிக்குமார் உட்பட பெருமளவான மஹிந்தவிற்கு ஆதரவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ad

ad