தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் இவரைப்பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கொச்சியில் உள்ள புகழ் பெற்ற சர்ச்சில் இருவரும் ரகசியம் திருமணம் செய்து கொண்டதாக தகவ பரவியது. இதனால் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் தனது திருமண செய்தியை இருவரும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ என் திருமணம் பற்றி வரும் எந்த தகவலும் உண்மையானது இல்லை. இந்தமாதிரியான தவறான வதந்திகள் என் வேலையைக் கெடுப்பதற்கான நாசவேலை. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட வகையில் இடையூறாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று நயன்தாராவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "திருமணம் நடந்ததாக வெளியான தகவலில் துளி கூட உண்மையில்லை. எனது வாழ்க்கையில் தற்போதைய நிலையில் நடக்கும் ஒரு விஷயம் சினிமாவில் நடிப்பதுதான்.
திருமணம் என்பது எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், அது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அது எனது வாழ்வில் நடக்கும்போது அதனை எல்லோருக்கும் தெரிவிப்பேன். மறைமுகமாக எனது திருமணம் நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சிம்பு உடனான காதல் முறிந்து, பின்னர் இயக்குனரும், நடிகருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன் தாரா. திருமணம் வரை சென்றும் அந்த காதலும் நிறைவேறாமல் போக, பின்னர் மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலேயே இந்த காதல் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.