இலங்கையின் முன்னணி வர்த்தகரான பிரஷான் நாணயக்கார நேற்று கைது செய்யப்பட்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இளம் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின்கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார்.
தம்மை சுமார் 10 வருடங்களாக கிரீன் லங்கா ஷிப்பிங் லிமிடெட்டின் முகாமைப் பணிப்பாளரான பிரஷான் நாணயக்கார 10 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குறித்த யுவதி; முறையிட்டிருந்தார்.
2013ம் ஆண்டில் பம்பலப்பிட்டி வீடமைப்பு தொகுதியில் வைத்து தாம் கொடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது தமக்கு 12 வயது என்றும் யுவதி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றிருந்த வேளையிலேயே பிரஷான் நாணயக்கார தம்மை சந்தித்ததாக யுவதி தெரிவித்துள்ளார்.