திமுக தலைவர் கலைஞர் அறிக்கை :
’’உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட அமர்வு, இன்று (29-7-2015) காலையில் அளித்த தீர்ப்பில், இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதி மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு சரியானது என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ராஜீவ்காந்தி கொலையை நாம் யாரும் நியாயப் படுத்துகிறவர்கள் அல்ல. இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று பல முறை அறிக்கை விடுத்தவன் நான் என்ற முறையில், இதற்குப் பிறகும் தாமதிக்காமல், தமிழக அரசு உடனடியாக சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். ’’