புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2015

ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாதிகள் மீது துருக்கி உக்கிர தாக்குதல்

 ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாத இலக்குகள் மீது துருக்கி போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின் இடம்பெற்ற மோச மான தாக்குதல் இதுவென துருக்கி அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர்.
குர்திஷ்களுடன் அமைதி முயற்சி சாத்தியமில்லை என்று ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் குறிப்பிட் டிருக்கும் நிலையிலேயே துருக்கி போர் விமானங்கள் ஆயுததாரிகளை இலக்குவைத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
தெற்கு துருக்கியின் தியர்பகிர் விமானத்தளத்தில் இரு ந்து புறப்பட்ட எப்-16 nஜட் விமானங்கள் ஈராக்கில் அறு இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக பெயரை வெளியிட கூடாது என்ற நிபந்தனையில் துருக்கிய அதி காரி ஒருவர் குறிப்பிட்டார். "கடந்த வாரம் வான் தாக்கு தல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவே மிக உக் கிரமான தாக்குதலாக அமைந்தது" என்று அவர் குறிப் பிட்டார்.
துருக்கி படையினர் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியே வடக்கு ஈராக்கில் இருக் கும் குர்திஷ் பிரிவினைவாதிகளான பி.கே.கேவின் இலக்கு கள் மீது துருக்கி கடந்த வெள்ளி தொடக்கம் தாக்குதல் களை நடத்தி வருகிறது.
இதில் ஈராக்கை ஒட்டிய தென்கிழக்கு துருக்கி மாகா ணமான சிர்னக்கிலும் பி.கே.கே. இலக்குகள் மீது துருக்கி யுத்த விமானங்கள் செவ்வாயன்று குண்டு போட்டன.
சிரியாவின் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இணையாகவே துருக்கி போர் விமானங்கள் குர்திஷ்கள் மீதும் தாக்குதல்களை நடத்து கிறது.
துருக்கி பி.கே.கே. மற்றும் ஐ.எஸ். ஆகிய இரு குழு வையும் தீவிரவாத அமைப்பாக கருதுகிறது.

ad

ad