புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2015

தற்போதைய செய்தி ..யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: மும்பையில் பலத்த பாதுகாப்பு




மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேமனின் குடும்பத்தினர் வசிக்கும் மாஹிம் உள்ளிட்ட முக்கிய மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மாஹிம் பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்துள்ளனர்.  மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று மாலை கூட்டம் ஒன்றை நடத்தி பாதுகாப்பு சூழலை குறித்து விவாதித்ததுடன் மேற்கொள்ள வேண்டிய அடுத்த நடவடிக்கைகளையும் குறித்து பேசியுள்ளார்.

அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மக்கள் அனைவரும் கட்டுப்பாடு மற்றும் சட்ட முறைகளை மதித்து நடக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.  கடந்த நவம்பர் 26ந்தேதி 2011ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து உருவாக்கப்பட்ட போலீசாரின் விரைவு தாக்குதல் குழு மேமன் குடும்பத்தினர் வசிக்கும் அல் ஹுசைனி கட்டிடம் உள்ளிட்ட சில இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கையாக போலீசார் பல்வேறு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.  மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் தாக்குதல்களில் குற்றவாளியான யாகூப் மேமன் கடைசியாக மேற்கொண்ட விடுதலைக்கான முயற்சி சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.  மேமன், நாக்பூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலை 7 மணிக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ad

ad