பிபா தலைவர் பதவிக்கான தேர் தலில் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கத்தின் தலைவர் மிச்சேல் பிளாடினி போட்டியிடவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான உத்தியோகபு+ர்வ அறி விப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகின்றது.
சர்வதேச கால்பந்து அமைப்பான பிபாவில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக ஊழல் இடம் பெறுவதாக குறித்த அமைப்பினைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் தொடர்ந்தும் அவர்க ளிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பிபா தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற செப் பிளா ட்டர் பின்னர் தனது பதவியை ராஜpனாமா செய்வதாக அறிவித்தி ருந்தார்.
எனினும் புதிய பிபா தலைவரை தெரிவு செய்யும் வரை குஐகுயு அமைப்பின் தலைவராக செப் பிளாட்டரே நீடிப்பார் எனவும் தெரி விக்கப்பட்டது.
இந்நிலையில் பிபா தலைவர் பதவி க்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஏற்கனவே பிறேசில் முன்னாள் வீரர் சிகோ, போட்டியிடு கின்றார். அதேவேளை கடந்த தேர்தலில் கலந்துகொண்ட ஜோர் டான் மன்னர் அலியும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தற்போது மிச்சேல் பிளாடினி போட்டி யிடவுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.