பிரித்தானியாவில் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தக் கைதுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறிப்பிட்ட லொறியின் சாரதி (40 வயது) 2,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் முதற்கொண்டு 36,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் வரையான தண்டப்பண விதிப்பையும் எதிர்கொண்டுள்ளார்.7 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!
தென் ஹேர்ட்போர்ட்ஷியரிலுள்ள சென் அல்பான்ஸ் நகருக்கு அண்மையில் எம்1 வீதியில் பயணித்த லொறியொன்றிலேயே மேற்படி சட்டவிரோத குடியேற்றவாசிகள் மறைந்திருந்துள்ளனர்.
அவ்வழியாக வாகனங்களில் பயணித்தவர்கள் குறிப்பிட்ட லொறி தொடர்பில் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அந்த லொறி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மேற்படி லொறியில் பயணித்த வியட்நாமைச் சேர்ந்த 17 குடியேற்றவாசிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன் அந்த வாகனத்தின் சாரதியான போலந்து நாட்டைச் சேர்ந்த நபரும் கைதுசெய்யப்பட்டார்.
அந்தக் குடியேற்றவாசிகளில் பராயமடையாத சிறுவர்கள் என நம்பப்படும் இருவர் சமூக சேவை அமைப்பின் பராமரிப்பில் வாழ ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.