புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

மனைவிகள் மோதலால் இரண்டாக உடைந்த ஆஸ்திரேலிய அணி


ஸ்திரேலிய அணியின் இரு வீரர்களின் மனைவிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாக உடைந்து விட்டதாக
சிட்னி 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி கண்ட தோல்வியால்'  அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மைக்கேல் கிளார்க் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறுகையில், “ ஒரு போட்டியின் போது  பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஜஸ்டின் லாங்கர் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் லாங்கரால், அந்த இடத்தில் பீல்டிங் செய்ய முடியவில்லை. இளம் வீரராக அப்போதிருந்த மைக்கேல் கிளார்க்கை அந்த இடத்தில் நிறுத்த முடிவு செய்தோம்.
பொதுவாக இளம் வீரரைத்தான் அந்த இடத்தில் பீல்டிங் செய்ய வைப்பது வழக்கம். ஆனால் மைக்கேல் கிளார்க் அந்த இடத்தில் பீல்டிங் செய்ய மறுத்து விட்டார். அதோடு அவர் கூறிய பதில் கடும் அதிர்ச்சியை அளித்தது. “அந்த இடத்தில் பீல்டிங் செய்யதான் வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டு விடுகிறேன்'' என்று பதிலளித்தார் என ஹேடன் கூறியுள்ளார்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறுகையில், “ கிளார்க் அணியில் வீரர்களை பிரித்தாளுபவர், மைக்கேல் கிளார்க் எப்பவுமே ஆணித்தரமான சில கருத்துக்களை கொண்டிருப்பவர்.அவருடைய கருத்துக்கள் எப்போதுமே பிறரை காயப்படுத்தும். என்னிடம் கூட அவர் பல முறை மோதியுள்ளார். ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் போல மைக்கேல் கிளார்க் இயல்பான கேப்டன் இல்லை. மைக்கேல் கிளார்க்கின் கேப்டன் பதவி அதனால்தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது '' என்றார்.
இந்நிலையில் சிட்னி 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்கள் இருவரின் மனைவிகளிடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாகவும், அதுதான் அணி இரண்டாக உடைய காரணமாக இருந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், குடும்ப விவகாரத்தால் ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை.  அடுத்த ஆட்டத்திலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க், அணி வீரர்களுடன் ஒரே பஸ்ஸில் பயணிக்க மறுத்துள்ளார். இது மற்ற வீரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது  என 'டெய்லி டெலிகிராப்' அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில், '' எனது மனைவிதான் எனது கிரிக்கெட் வெற்றிக்கு காரணமாக இருப்பவர். எனது மனைவி இல்லையென்றால் நான் பாதி வீரன்தான். ஊடகங்கள் குறிப்பிடுவது போல்  அணி வீரர்களுக்குள் எந்த பிளவும் கிடையாது ''என்றார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் இயார்ன் ஹீலே, '' ஆஸ்திரேலிய வீரர்கள் மனைவிகள், காதலிகளை  கூட  அழைத்து செல்லத் தடை விதிக்க வேண்டும். அடுத்த ஆஷஸ் தொடரை கைப்பற்றிய பின்தான் மீண்டும் மனைவிமார்களை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

ad

ad