நாளை 11ம் திகதியன்று நண்பகலுக்கு முன்னர் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அவர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரட்ணவுக்கு அவர் பிறப்பித்துள்ளார்.
கட்சி தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தகவலை ஆணையாளர் வெளியிட்டார்.
இதேவேளை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஒருபக்க சார்பு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.