புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் புல்மோட்டை பொறுப்பாளர் நிரபராதியென இன்று விடுதலை


கடந்த 2006ம் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைதான, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புல்மோட்டை பிரதேசத்தின் பொறுப்பாளர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, புலிகள் அமைப்பின் புல்மோட்டை பொறுப்பாளர் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த புல்மோட்டையைச் சேர்ந்த ஜயினுதீன் சுபைர் வயது(49) என்பவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று திங்கட்கிழமை திருகோணமலை உயர்நீதி மன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஒன்பது வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரையே இவ்வாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி பா.சசி மகேந்திரன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

ad

ad