மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியபோது போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றக்காவலில் உள்ள அந்த மாணவர்கள் மீது புழல் சிறைக்குள் கொடூரத் தாக்குதலை சிறை அதிகாரிகள் தொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து உண்மை நிலை தெரியவர, இம்மாணவர்களை நீதிமன்றத்தின் நிறுத்தக் கோரிய் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று, மாவட்ட நீதிபதி ஒருவர் சிறைக்கு சென்று தாக்கப்பட்ட மாணவர்களை விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.