புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு ரத்து , 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கி இருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதேவேளையில், 6 வாரங்களுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என தயாநிதிமாறன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்கள் நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என தயாநிதிமாறனுக்கு அவகாசம் அளித்தார்.

மேலும், முன்ஜாமீன் ரத்தான உத்தரவு நகல் இன்று மாலைக்குள் சிபிஐக்கு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

ad

ad