புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

ஐ.நா. அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் கருத்து வெளியிடுவோம்


 "ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர்
பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்."இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
அறிக்கை கிடைப்பதற்கு முன்னதாக மேற்படி விவகாரங்கள் தொடர்பில் தற்போது வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பில் எதுவும் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை அறிக்கையில், இரு சிவிலியன்கள் உட்பட இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் 43 பேர் போர்க்குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் எனத் தற்போது இடம்பெற்றுவரும் தேர்தல் பரப்புரையில்  எதிர்க்கட்சியினரால் வெளியிடப்படும் கருத்து மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,
"அன்று அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலும் இதுகுறித்து அவரும் கூறியிருந்தார்.
நானும் கூறியிருந்தேன். அனைவரும் 40 என்கின்றனர், 20 என்கின்றனர், 2 என்கின்றனர். ஆனால், உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இது ஜனாதிபதியிடமே கையளிக்கப்படும்
. அதன்பின்னர் அதை அமைச்சரவைக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் சமர்ப்பிக்க முடியும். அந்த இரு நடவடிக்கைகள்தான் அடுத்ததாக உள்ளன. அதன்பின்னர்தான் எமக்கு அதுபற்றிக் கூறமுடியுமாக இருக்கும்.
குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. ஆனால், ஊடகங்களில் சிலசில விடயங்கள் வெளியிடப்படுகின்றன. அதற்காக நாம் பதில் வழங்கமுடியாது. வெள்ளைக்கொடி விவகாரமும் ஐ.நா. அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும். எனவே, அறிக்கை கிடைத்தபின்னர் பார்ப்போம்'' - என்றார்

ad

ad